என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தமிழக டிஜிபி
நீங்கள் தேடியது "தமிழக டிஜிபி"
தமிழக டிஜிபியின் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கில், இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது. #DGPCase #HCMaduraiBench
மதுரை:
தமிழக டிஜிபி ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு எதிராக, மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதின்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு, டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளதாகவும், அவரது பணி நீட்டிப்பை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
குட்கா முறைகேடு தொடர்பாக, சிபிஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் போய் சேரவில்லை என்று கூறி, பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
அதேசமயம், இவ்வழக்கில் டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் வரும் 29-ம் தேதிக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். #DGPCase #HCMaduraiBench
தமிழக டிஜிபி ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு எதிராக, மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதின்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு, டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளதாகவும், அவரது பணி நீட்டிப்பை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
குட்கா முறைகேடு தொடர்பாக, சிபிஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதேசமயம், இவ்வழக்கில் டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் வரும் 29-ம் தேதிக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். #DGPCase #HCMaduraiBench
மசாஜ் சென்டரில் எப்போது, எந்த சூழ்நிலையில் போலீசார் சோதனை நடத்தலாம் என்ற வரையறை செய்து தமிழக டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?’ என்று ஐகோர்ட் கேள்வியெழுப்பியுள்ளது.
சென்னை:
கோவையை சேர்ந்தவர் புஷ்பா. இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கோவையில், ‘ஸ்பா’ என்ற மசாஜ் சென்டர் நடத்தி வருகிறேன். இங்கு, கேரளாவின் பாரம்பரியமான ஆயுர்வேத சிகிச்சை அடிப்படையில் உடலுக்கு மசாஜ் செய்யப்படுகிறது. இதனால், உடலில் உள்ள பல நோய்கள் குணமடைகின்றன.
ரத்த நாளங்கள் சரியாகி, ரத்த ஓட்டம் சீராகுகிறது. ஆனால், தேவையில்லாமல் போலீசார் இதுபோன்ற பாரம்பரியமான மசாஜ் சென்டரில் சோதனை நடத்துகின்றனர். 2014-ம் ஆண்டு மசாஜ் சென்டரில் தேவையில்லாமல், அடிப்படை முகாந்திரம் இல்லாமல், சோதனை நடத்தக்கூடாது என்று அப்போதைய ஐகோர்ட்டு நீதிபதி வி.ராம சுப்பிரமணியம் தீர்ப்பு அளித்தார்.
எனவே, தேவையில்லாமல் மசாஜ் தொழிலில் தலையிடக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். பின்னர் நீதிபதி, ‘ஐகோர்ட்டு ஏற்கனவே 2 முறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் அடிப்படையில், மசாஜ் சென்டரில் எப்போது, எந்த சூழ்நிலையில் போலீசார் சோதனை நடத்தலாம் என்ற வரையறை செய்து தமிழக டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக சிறப்பு அரசு பிளீடர் ஏ.பாலமுருகன் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். #ThoothukudiFiring #ThoothukudiIncident #CBCID
சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதேசமயம் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மற்றும் அதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். #ThoothukudiFiring #ThoothukudiIncident #CBCID

இதற்கிடையே, பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மற்றும் அதற்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். #ThoothukudiFiring #ThoothukudiIncident #CBCID
×

X